திருப்பணிக்கு முன் ஸ்ரீஸ்ரீ சினிவாச தேவஸ்தானம்

இத்திருக்கோயில் 1879-ஆம் ஆண்டு பல வகுப்பினரிடம் நன்கொடை பெற்று சிறியயளவில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியைக் கட்டியுள்ளனர், பின்னர் மற்ற சன்னதிகள் கட்டப்பட்டன இக்கோயில் 1966-ஆம் ஆண்டு இந்து சமய நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கத் தொடங்கியது. அதன்பின் 1982-இல் பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாசம்பரோஷணம் 08-02-1985 - ல் நடந்துள்ளது.

1982 க்கு பிறகு இவ் தோவஸ்தானம் சம்ப்ரோஷணம் செய்யப்படாமல் இருந்துவந்தது, பின்பு புதுச்சேரி இந்து அறநிலைத்துறை நிதி உதவியாலும், பொது மக்கள்் அன்பர்களாலும் மற்றும் முக்கிய பிரதிநிதிகளாலும் இத்திருத்தலம் முதல் கட்டமாக 12.2.2016 அன்று மஹாசம்பரோஷணம் நடைபெற்றது.

22-08-2012 முன்பு இத்திருக்கோயில் மிகவும் சிதலமடைந்து இருந்தது, கீழ் கண்ட படங்கள் இத்திருக்கோயிலின் தோற்றத்தினை விளக்குகின்றது.

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!