தலவரலாறு

அபிராம குணகர தாசரதே

ஜகதேக தநுர்தர தீரமதே !

ரகுநாயக ராம ரமேச விபோ

வரதோ பவ தேவ தயாஜலதே!!

ச்ரிய; காந்தாய கல்யாண நிதயே நித்யோர்த்திநாம்!

ஸ்ரீவேங்கடநிவாஸாய ஸ்ரீநிவாசாய மங்களம்!

'அலர்மேல் மங்கையுறை மார்பல்' என்று ஆழ்வார் அருளிச் செய்தபடி, சத்யத்வம், ஜ்ஞாநத்வம், அநந்தத்வம், அமலத்வம், ஆநந்ததவம் என்ற ஐந்து குணங்களுடனும்.

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ

வைகுண்ட மாதவ ஜநார்தந சக்ரபரணே !

என்ற பல திருநாமங்களைக் கொண்டவனும்,

சேஷாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, விருஷாத்ரி, சிம்ஹாத்ரி என்ற ஏழுமலையான் திருநாமங்களைப் பெற்று, கிருஷ்ணன், ராமன் , ஸ்ரீ நிவாஸனாக காட்சியளித்து, வணங்குகிற பக்தர்களின் கோரிய பயனைக் கொடுத்து நல்வழிப்படுத்து கலியுக தெய்வமாய், புதுவை முத்தியால்பேட்டையில் திருக்கோயில் கொண்டெழுந்த்ருளியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் சுமார் நூறாண்டு காலமாய் அருள்பாலித்துக் கொண்டுவருகிறது.

உயிரினங்கள் தங்கள் வாழ்கையில் செய்கின்ற செயல்களாகிய நிற்பவை, அமருபவை , படுபன போன்ற நிலைகளில் , பெருமாள் இங்கு முன்று நிலைகளில் காட்சி தருகிறார் , அவைகள் முறையே..

நின்ற கோலத்தில் - ஸ்ரீநிவாசப் பெருமாள்

அமர்ந்த கோலத்தில் - ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

சயனந்த கோலத்தில் - ஸ்ரீ ரங்க நாதர்

இத்திருகோயில் 1879 - ஆம் ஆண்டு பல வகுப்பினரிடம் நன்கொடை பெற்று சிறியளவில் அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதியைக் கட்டியுள்ளனர், பின்னர் மற்ற சன்னதிகள் கட்டப்பட்டன , இக்கோயில் 1966 -ஆம் ஆண்டு இந்து சமயநிறுவனதுறையின் கீழ் இயங்கத் தொடங்கியது. அதன்பின் 1982 - இல் பாலாய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாசம்பரோஷணம் 08-02-1985 - ல் நடந்துள்ளது.

இத்திருக்கோயிலில் புதிய ஐந்து நில இராஜகோபுர மனைகோல் விழா மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்களின் சீரியத் தலைமையில் 22-08-2012 அன்று நடைபெற்று சுமார் ரூ 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதுவன்றி ஏற்கனவே அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள், அருள்மிகு அலுமேலு மங்கைத்தாயார், அருள்மிகு லட்சுமி நரசிம்மர் , அருள்மிகு அரங்கநாதர் மற்றும் அருள்மிகு அஞ்சிநேயர் சன்னதிகள் ஐந்து புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன ரூபாய் 1 கோடி செலவில்.

இக்கோயில் தற்சமயம் புதுவை அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!