பிரார்த்தனை திருத்தேர்

பன்னெடுங்காலமாய்ப் பழமை மிக்கதும், நூறாண்டுகாலமாய் சீர் செய்யப்படாமல் இருந்த, வேலைப்பாடுகள் மிகுந்த,சாத்திரப்படி அமைந்த "புண்ய கோடி விமானம்" தற்போது புனரமைக்கப் பெற்று நம் திருக்கோயிலின் உள்ளேயே, பாதுகாப்புடன், பயன்படுத்தி, பெருமாள் எழுந்தருளி வலம்வரும் வகையில் திருத்தேர் அற்புதமாக அமைந்துள்ளது.

புண்ணியம் பலசெய்து வரும் நன்மைகளை எளிதில் அடைந்திடவே நம் முன்னோர்கள், இத்திருத்தேர்க்கு புண்ணிய கோடி விமானம் எனப் பெயரிட்டனர் போலும்! இத்தேரில் அமைந்துள்ள் சிற்பங்கள் :

1. கோயில் - திருமலை - பெருமாள் கோயில் எனும் தலையாய திருப்பதிகளின் பெருமாள் வடிவங்கள்.

2. தேவர்க்கும் கிட்டாத அமிர்தம் கடைந்து தரும் காட்சி,

3. துன்பமிகு துயர்அகலத் தாங்கிவரும் கோவர்த்தன கண்ணன் திருவுரு

எனப் பல்வேறு காட்சிகளையும், 12 ராசிகளை குறிக்கும் வகையில் தூண்களையும், 3 அந்தராள்ங்களையும் (நிலை) கொண்டு, பொன்னிகள் வண்ணமாய் விளங்கும், இப்பிரார்த்தனை திருத்தேரில், பெருமானை எழுந்தருளச் செய்து வலம் வந்து நலம் அனைத்தும் பெறுவோம்!

ஆயுள், ஆரோக்யம் தர வேண்டியும், வாழ்க்கைச் சக்கரம் சீர்பெற நடந்திடவும், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடவும், புண்ணியங்கள் பலசேர்ந்து இன்னருள் பெற்றிடவும், (திருத்தேரில்) புண்ணிய கோடி விமானத்தை, ப்ரார்த்தனையாய், இழுத்திடுவோம்! ஸ்ரீநிவாசப் பெருமாளீன் நட்சத்திரமாகிய, திருவோணத் திருநாள், ஏகாதசி மற்றும் நம்முடைய சொந்த வேண்டுதலாக, நம்முடைய பிறந்தநாள், திருமண நாள், நம் உற்ற நண்பர், உறவினருக்காக வேண்டியும், புண்ணியகோடி விமான திருத்தேரில் திருமாலை எழுந்தருளச் செய்து, திருவருள் பெற்று மகிழ்வோம், எண்ணிலா நலம் பெற வேண்டி புண்ணிய கோடி விமானத்தில் தரிசித்து வலம் வருவோம்!

குறிப்பு : வேண்டுதலை பூர்த்தி செய்ய விரும்பும் பக்தர்கள், திருக்கோவில் கட்டணமாக ரூ1000/- செலுத்தி தேர் இழுத்து இறையருளை பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.