தலமகிமை

ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலின் தலமகிமை

இத்திருத்தலத்தில் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயர் ஸ்ரீஅலர்மேல்மங்கைத்தாயார், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீலட்சுமி நரஸிம்மர், ஸ்ரீஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீமந் மணவாள மாமுனிகள் க்கான சன்னதிகள் உள்ளன.

ஸ்ரீஸ்ரீநிவாசப்பெருமாள்

திருவுக்கும் திருவாகிய செல்வத் திருமால், கலெள வேங்கடநாயக: என்றபடி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், தனக்கு ஒப்பரிலாத தானொருவனாய் நிற்க்கும் நிகரில்லாத தெய்வமாம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள், நின்றான் நெடியாய் என்ற அழகிய தோற்றத்துடம், கருணையே வடிவமாய் காட்சிதருகின்றார்.

ஸ்ரீஅலர்மேல்மங்கைத்தாயார் :

எம்பெருமானை அடைவதற்கும் , அவனது இன்னருளை பெறுவதற்கும் முன்னின்று அருள் செய்பவளாம், பதும முகமும், கரமும், பாதமும் கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருபவளாய் தனிச்சன்னதியில், அலர்மேல்மங்கைத்தாயார் அருள்கிறாள்.

ஸ்ரீரங்கநாதர் :

பூலோக வைகுண்டமாம், திருவரங்கச் செல்வன், பாலன் தனதுருவாய், அழகிய அரவணையில், பாலசயனரூபத்துடன், சேவை தருகிறார்.

ஸ்ரீலட்சுமி நரஸிம்மர் :

உலக தர்மத்தைக்காக்க, இரணியனை அழித்து ,பிரகலாதனை வேண்டுகோளை ஏற்று, திருமகளுடன் அமர்ந்து காட்சிநல்கும் நரஸிம்மர், நம் அச்சங்களை எல்லாம் நீக்கிக் காக்கும் வண்ணம், நெடிய உருவான ஆளரியாய் தரிசனம் தருகிறார்.

ஸ்ரீஆஞ்சனேயர்:

சிறியதிருவடி என்றழைக்கப்படும் , இருகரம் கூப்பியவண்ணம் பக்த ஹனுமானாக, நவகோள் மகிழ்ந்து நன்மையளிக்கும் வண்ணம் காட்சிதருகிறார்.

ஸ்ரீமந் மணவாள மாமுனிகள்

ஈட்டுத் தமிழை நமக்கு உரைத்து, வைணவத்தை நிலைநாட்டிய, ஆசார்ய ஸார்வபெளமராகிய மணவாள மாமுனிகள், கம்பீரமான தோற்றத்துடன் பெரிய ஜீயராகக் காட்சித்தருகிறார்.

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!