தலஅமைப்பு

இந்தியாவின் தென் பகுதியில் தமிழகத்தில் உள் பகுதியில் , புதுச்சேரி என்னும் மாநிலத்தில் , மிகவும் பழைமையான 1800 ஆம் ஆண்டு கட்டப்பட்டதும், மிகவும் பழைமையான வைணவ திருக்கோயில் அருள்மிகு தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். இக் திருத்தலம் ஆனது புதுச்சேரியில் முத்தியால்பேட்டை என்னும் பகுதியில் , காந்திவீதி என்னும் இடத்தில் உள்ளது.

இத்திருக்கோயிலின் மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் , கிழக்குமுகமாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் தாயார் சன்னதி கிழக்கு முகமாக நோக்கி ஸ்ரீஅலமேலுமங்கைத்தாயார் என்னும் நாமத்தோடு மூலவபெருமானுடன் அருள்பாலிக்கின்றார்.

இங்கு பெருமாள் முன்று நிலைகளில் ரங்கநாதராகவும், நரசிம்மமூர்த்தியாகவும் மற்றும் மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆகவும் சன்னதிகொண்டு உள்ளார்.

ரங்கநாதர் மற்றும் நரசிம்மமூர்த்தி ஆலயங்கள் மேற்கு முகமாக நோக்கி உள்ளது.

பரிவார மூர்த்திகளாக

ஸ்ரீராமர்

ஸ்ரீஆண்டாள்

ஸ்ரீமணவாள மாமுனிகள்

ஸ்ரீவரசக்தி அஞ்சனேயர்

போன்ற மூர்த்திகளுக்கான ஆலயங்கள் இத்திருகோயிலின் பிரகாரத்தில் அமைந்து உள்ளது. இவ்வாலயத்தில் வசந்த மண்டபம் மிகவும் பழைமையான , பிரபலமான ஒன்று. இவ்வாலயத்தில் 200 வருடங்களுக்கு முந்திய சப்பரம் உள்ளது. இராஜகோபுரம் மிகவும் பெரிய அளவில் சிற்பங்களை கொண்டது,

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!