திருப்பணி

இத்திருக்கோயில் 1879-ஆம் ஆண்டு பல வகுப்பினரிடம் நன்கொடை பெற்று சிறியயளவில் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியைக் கட்டியுள்ளனர், பின்னர் மற்ற சன்னதிகள் கட்டப்பட்டன இக்கோயில் 1966-ஆம் ஆண்டு இந்து சமய நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கத் தொடங்கியது. அதன்பின் 1982-இல் பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹாசம்பரோஷணம் 08-02-1985 - ல் நடந்துள்ளது.

இத்திருக்கோயிலில் புதிய ஐந்து நில இராஜகோபுர மனைகோல் விழா மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்களின் சீரியத் தலைமையில் 22-08-2012 அன்று நடைபெற்றது. இக்கோயிலுக்கான மொத்த செலவு சுமார் ரூ 3.50 கோடி ஆகும் என மதிப்பிடபட்டுள்ளது, முதல் கட்டமாக ஐந்து நிலை இராஜகோபுரம் ரூபாய் 40 இலட்சத்திற்கு இந்து சமய நிறுவனங்கள் துறையின் ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டு கட்டிமுடிக்கப் பெற்றுள்ளது.

இதுவன்றி ஏற்கனவே அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள், அருள்மிகு அலுமேலு மங்கைத் தாயார், அருள்மிகு லஷ்மி நரசிம்மர் மற்றும் அருள்மிகு அரங்கநாதர், அருள்மிகு அஞ்சநேயர் சன்னதிகள் ஜந்தும் புதியதாக நிர்மானிக்க முடிவெடுக்கப்பட்டு திருப்பணி இனிதே சுமார் ரூபாய் 1 கோடி செலவில் நடந்து முடிந்தன.

எனவே, 12/02/2016 அன்று இக்கோவிலின் மகாகும்பாபிக்ஷேகம் திருக்கோவிலுார் ஐுயர் சுவாமிகள் , சிங்கப்பெருமாள் கோவில் முதலியாண்டான் சுவாமிகள் முன்னிலையில் ஶ்ரீரங்கம் ஐுயர் சுவாமிகள் நல் ஆசியுடன் நடைபெற்றது.

இரண்டாம் நிலை திருப்பணிகள் :

அருள்மிகு ஆண்டாள், அருள்மிகு ராமர், அருள்மிகு கிருஷ்ணர், அருள்மிகு ஆழ்வார்கள், அருள்மிகு மணவாள மாமுனிகள், உற்சவர் சன்னதிகள் மற்றும் சாலாகார கோபுரம் 3-நிலை (மேற்கு) கோபுரம் சுமார் ரூ 2 கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டு முடிக்கப்பட்டது

இதுவன்றி, சுற்று மண்டபங்கள், தரை, சுற்றுச்சுவர், முன்மகா மண்டபம் மற்றும் கருட ஆழ்வார் சன்னதி, துஜஸ்தம்பம் மற்றும் ராஜகோபுர கதவு போன்ற வேலைகளுக்கு சுமார் ரூபாய் 1,11 கோடி மதீப்பிட்டில் முடிக்கப்பட்டது.

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!